Advertisment

பாலியல் புகார்; 'ஓ சொல்றியா மாமா..." பிரபலத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

mumbai police Chargesheet file against Choreographer Ganesh Acharya

இந்தி திரையுலகில் முன்னணி நடன இயக்குநராகஇருக்கும் கணேஷ் ஆச்சார்யா தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான ரௌத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் பெற்றார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்றஓ சொல்றியா மாமா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இப்பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெண் உதவி இயக்குநர் ஒருவர் கணேஷ் ஆச்சார்யா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். அதில், "கணேஷ் ஆச்சார்யா தன்னை ஆபாச படங்களைபார்க்க சொல்லி வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகதெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் கணேஷ் ஆச்சார்யா மீது 8 பிரிவுகளில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவிற்குஎதிரான இவ்வழக்கின் மும்பை போலீசார் நேற்று (1.4.2022) அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

allu arjun pushpa samantha
இதையும் படியுங்கள்
Subscribe