Advertisment

ஸ்ரீதேவியை கவுரப்படுத்திய மும்பை மாநகரம்

mumbai corporatuon honoures sridevi

Advertisment

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

2018இல் துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாக மும்பை மாநகராட்சி, லோகண்ட்வாலா சந்திப்பு ஒன்றுக்கு ஸ்ரீதேவி கபூர் சவுக் எனப் பெயரிட்டு கவுரப்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவியை கவுரப்படுத்த வேண்டும் என்பதற்காகஅப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் தான் ஸ்ரீதேவி வசித்து வந்தார். மேலும் அவரது இறுதி ஊர்வலம் இந்த வழியாகத்தான் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Mumbai sridevi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe