அக்டோபர் 8ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்!

vijaysethupathi

நடிகர் விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'முகிழ்'. விஜய் சேதுபதி தயாரித்துள்ள இப்படத்தை, கார்த்திக் இயக்கியுள்ளார். 62 நிமிட கால அளவு மட்டும் கொண்ட இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நடிகை ரெஜினா கெசண்ட்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், முகிழ் படம் வரும் அக்டோபர் 8ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் நேரடியாக யூ-டியூப் தளத்தில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது நேரடி திரையரங்க வெளியீடாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

vijaysethupathi
இதையும் படியுங்கள்
Subscribe