/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5_61.jpg)
நடிகர் விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'முகிழ்'. விஜய் சேதுபதி தயாரித்துள்ள இப்படத்தை, கார்த்திக் இயக்கியுள்ளார். 62 நிமிட கால அளவு மட்டும் கொண்ட இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நடிகை ரெஜினா கெசண்ட்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் அக்டோபர் 8ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. முன்னதாக, இப்படத்தை நேரடியாக யூடியூப் தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது நேரடியாகத் திரையரங்கிலேயே இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)