Advertisment

இணையத்தில் ட்ரெண்டாகும் முகென் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 

mugen starring madhil mel kaadhal movie first look poster released

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான முகென், தற்போது கவின் இயக்கும் 'வேலன்' படத்தில் நடித்துள்ளார். இதில் முகெனுக்கு ஜோடியாக மீனாக்ஷி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இப்படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, பிரபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். காமெடி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1abdc738-d1ab-4a9f-be62-6325ab6d40d5" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_19.jpg" />

Advertisment

இதனிடையே நடிகர் முகென், அஞ்சனா அலிகான் எழுதி இயக்கும் 'மதில் மேல் காதல்' படத்தில் நடித்துவருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு நானி, நித்யாமேனன் நடிப்பில் வெளியான 'வெப்பம்' படத்தை இயக்கியிருந்த அஞ்சனா அலிகான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முகெனுடன் கைகோர்த்துள்ளார். 'மதில்மேல்பூனை' படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடிக்க, சாக்ஷி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தை சீரடி புரொடக்சஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில்,முகென் நடிக்கும் 'மதில் மேல் காதல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போதுவெளியிட்டுள்ளது. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இப்படத்தின்ஃபர்ஸ்ட் லுக்போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

divya barathi mugen
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe