Skip to main content

இணையத்தில் ட்ரெண்டாகும் முகென் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

mugen starring madhil mel kaadhal movie first look poster released

 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான முகென், தற்போது கவின் இயக்கும் 'வேலன்' படத்தில் நடித்துள்ளார். இதில் முகெனுக்கு ஜோடியாக மீனாக்ஷி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, பிரபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். காமெடி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 

 

ad

 

இதனிடையே நடிகர் முகென், அஞ்சனா அலிகான் எழுதி இயக்கும் 'மதில் மேல் காதல்' படத்தில் நடித்துவருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு நானி, நித்யா மேனன் நடிப்பில் வெளியான 'வெப்பம்' படத்தை இயக்கியிருந்த அஞ்சனா அலிகான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முகெனுடன் கைகோர்த்துள்ளார். 'மதில்மேல் பூனை' படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடிக்க, சாக்ஷி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தை சீரடி புரொடக்சஷன் நிறுவனம் தயாரிக்கிறது. 

 

இந்நிலையில், முகென் நடிக்கும் 'மதில் மேல் காதல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமலின் ஆசியுடன் பணிகளைத் தொடங்கிய ஜி.வி. பிரகாஷின் 'கிங்ஸ்டன்'

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

gv prakash 25th film kingston update

 

இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி. பிரகாஷ், நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தனுஷின் கேப்டன் மில்லர், விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றுகிறார். 

 

இந்த நிலையில் நடிகராக தற்போது 25வது படத்தில் நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இப்படத்தில் ஏற்கனவே ஜி.வி. பிரகாஷுடன் ஜோடியாக நடித்த திவ்ய பாரதி நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றி இசைப் பணிகளையும் மேற்கொள்கிறார். கமல் பிரகாஷ் என்பவர் இயக்குகிறார். 

 

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் பூஜையில் கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். படத்திற்கு கிங்ஸ்டன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

 

 

 

Next Story

மீண்டும் இணைந்த 'வேலன்' பட கூட்டணி

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

mugen rao next movie update

 

மலேசியாவை சேர்ந்த தமிழரான முகின் ராவ், அங்கு சுயாதீன இசைக்கலைஞராக இருந்து, அதன் மூலம் சமூக வலைதளம் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களிடமும் பிரபலமானார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்று கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான 'வேலன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் வெற்றி, மதில் மேல் காதல் என சில படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது. 

 

இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாவது முறையாக மீண்டும் 'வேலன்' பட இயக்குநரான கவின் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜி.மணிக்கண்ணன் தயாரிக்க இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாய் ஒன்று முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் நடைபெறவுள்ளது. 

 

க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்திற்கு 'டாடா' பட இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். அடுத்த வாரத்தில் தொடங்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்படிப்பை ஒரே கட்டமாக தொடங்கி நிறைவு செய்ய படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.