/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mugen-rao.jpg)
பிக்பாஸ் சீசன் 3 போட்டியின் வெற்றியாளர் முகின் ராவ், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
மலேசியாவை சேர்ந்த தமிழரான முகின் ராவ், அங்கு சுயாதீன இசைக்கலைஞராக இருந்தார். அதன் மூலம் சமூக வலைதளம் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களிடமும் பிரபலமானார்.
2011ஆம் ஆண்டு நானி, கார்த்திக் குமார், நித்யா மேனன், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வெப்பம்'. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அஞ்சனாஅந்த படத்துக்கு பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார்.
தற்போது, இவர் தனது அடுத்த படத்தை இயக்க மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அந்த படத்தில் நாயகனாக முகின் ராவ் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இந்த படம் கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் உடனடியாக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)