Advertisment

சிறுத்தை சிவா டீமில் இணைந்த பிக்பாஸ் முகேன்!

gsgs

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் முகேன் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'வேலன்'. ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கலைமகன் தயாரிக்கவுள்ள இப்படத்தை இயக்குநர் கவின் எழுதி இயக்குகிறார். ஒரு அழகான காதலை காமெடியுடன் கலந்து சொல்லும் இப்படம், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் சரியான விகிதத்தில் கலந்து அனைவரும் ரசிக்கும் வகையிலான குடும்ப படமாக உருவாகிறது. மேலும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறியபோது...

Advertisment

"குடும்பமாக இணைந்து பார்க்கும்அழகான படங்களை உருவாக்குவதே எனது குறிக்கோள். குடும்பங்களை இணைக்கும் எந்தவிதமான கதைகளும் சிறப்பானதாகவே இருக்கும். இன்றைய உலகில் குடும்பங்களுக்குத் தேவையான நல்ல கருத்துக்களை நேர்மறை அம்சங்களோடு சொல்ல வேண்டியது நமது கடமை. அறிமுக இயக்குநர் கவின், பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் குழுவிலிருந்து வந்துள்ளார். அவரிடம் கற்ற வித்தை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. மிக அழகாக படத்தினை உருவாக்கி வருகிறார். மிக உற்சாகமான இளமை துள்ளலுடன் இருக்கிறார் நடிகர் முகேன். அது அவரது நடிப்பிலும் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. அழகான தேவதை போன்று இருக்கிறார் நடிகை மீனாக்‌ஷி.

Advertisment

பிரபு அவர்களும் சூரி அவர்களும் மிகுந்த ஒத்துழைப்பினை நல்கியுள்ளார்கள். அனுபவம் வாய்ந்தவர்களுடனும், இளம் திறமைகளுடனும் இணைந்து வேலை செய்யும் இந்த வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியினை தந்துள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் முடிந்த நிலையில், தற்போது பொள்ளாச்சி பகுதிகளில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் அயராத உழைப்பினை தந்து வருகின்றனர். படத்தினை வரும் கோடை காலத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்" என்றார். பிக்பாஸ் முகேன் நாயகனாகவும், மீனாக்‌ஷி நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் பற்றிய அறிவிப்புகள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

siruthai siva mugen
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe