
வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு அனிமேஷன் சீரிஸ் வெளியாகியிருக்கிறது. அதில் 1994ஆம் ஆண்டு ‘தி லயன் கிங்’ அனிமேஷன் சீரிஸ் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அந்த அனிமேஷனை கடந்த 2019ஆம் ஆண்டு ரீ மேக் செய்யப்பட்டு திரைப்படமாக வெளியிட்டனர். இப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, படத்தில் வரும் முஃபாசா என்ற சிங்கத்தை வைத்து தற்போது ‘முஃபாசா; தி லயன் கிங்’ என்ற தலைப்பில் திரைப்படம் உருவாக்கியுள்ளனர். வருகிற 20ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் தமிழ் பதிப்பில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸ், டாக்கா கதாபாத்திரத்திற்கு அசோக் செல்வன், கிரோஸ் கதாபாத்திரத்திற்கு நாசர், இளைய ரஃபிக்கி கதாபாத்திரத்திற்கு விடிவி கணேஷ், டிமோன் கதாபாத்திரத்திற்கு சிங்கம் புலி, பும்பா கதாபாத்திரத்திற்கு ரோபோ சங்கர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் படத்தில் வரும் விலங்குகளுக்கு குரல் கொடுத்த அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், விடிவி கணேஷ், சிங்கம் புலி, ரோபோ சங்கர் ஆகியோர் பங்கேற்று படத்தின் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது சிங்கம்புலி பேசுகையில், “2019 வெளியான தி லயன் கிங் படத்திலும் நான் டப்பிங் பேசியிருந்தேன். எனக்கு 15, 20 ஹிட் படத்தில் நடித்ததுபோல இருந்தது. டிஸ்னியில் இருந்து வரும் பரிசுகளை நான் யூஸ் பண்ணாமலேயே வச்சுருக்கேன். ஏன்னா அது டிஸ்னியில் இருந்து வந்தது. டிஸ்னியில் ஒரு அணிலாக, எறுப்பாக இருப்போமா எனத் தெரியாது. ஆனால் அங்கிருந்து செக் வந்தாலும் அதில் டிஸ்னி என போட்டிருக்கும்” என பேசினார். அவர் பேசியபோது குறுக்கிட்ட விடிவி கணேஷ், “செக்கை இன்னும் பணமா மாத்தலயா” என கிண்டலடிக்க, அதற்கு சிங்கம்புலி, “இருயா நீ படுத்துற பாடு...போட்டோ எடுத்து வச்சுருக்கேன்யா. 2 நிமிஷம் தான் இருக்கு பேசிக்கிறேன். இந்தாளுக்கு முதலில் ரெட் படத்தில் நான் தான் க்ஸோஸ் அப் வைத்து அறிமுகப்படுத்தினேன்” என்றார். அதற்கு விடிவி கணேஷ், “இப்போ அத சொல்லலனா அந்தாளு மண்ட வெடிச்சுரும்” என மேடையிலேயே ஒருவரை ஒருவர் கிண்டலடித்துப் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.