Mudhal Nee Mudivum Nee film release on zee5

'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'கிடாரி', 'நிமிர்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த தர்புகா சிவா முதலும் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இளைஞர்களின் உணர்வுகளையும், இன்றைய சிறுவர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கிஷன் தாஸ், அம்ரிதா மாண்டரின், பூர்வா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை எழுதி இயக்கியத்துடன்தர்புகா சிவா இசையும் அமைத்துள்ளார். கிஷன் தாஸ், அம்ரிதா மாண்ட்ரியாமீத்தா ரகுநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை சமீர் தயாரித்துள்ளார்.

Advertisment

'முதல் நீ முடிவும் நீ'படத்தின்அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் ஜனவரி 21 ஆம் தேதிஜீ 5ஓடிடி தளத்தில் வெளியாக்கவுள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பே நியூயார்க் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான கௌரவ விருதும்,மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலிம் விருது விழாவில்இப்படத்தை இயக்கியதற்காக இயக்குநர் தர்புகா சிவாவுக்குசிறந்த இயக்குநர் விருதும்வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment