MS Dhoni turns producer for Telugu, Malayalam and Tamil films

Advertisment

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி இந்தியா நடத்தும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். இதனிடையே விவசாயம் செய்வதிலும், விளம்பரங்களில் நடிப்பதும் என கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் 'தோனி என்டர்டைன்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 'ரோர் ஆஃப் லயன்' என்ற ஆவணத்தொடரை தயாரித்துள்ளது. இதனை தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு 'ப்ளேஸ் டு க்ளோரி' ('Blaze to Glory) என்ற ஆவணப்படத்தையும் மற்றும் 'தி ஹிடன் இந்து' (The Hidden Hindu) என்ற புராணத்தை அடிப்டையாகக் கொண்ட ஒரு திரில்லர் படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தோனி, தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் படங்கள் எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தோனி தமிழில் விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.