இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாண்டு வருகிறார். இந்தாண்டும் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடுகிறார். மார்ச் 22ஆம் தேதி இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளதால் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கிரிக்கெட்டை தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வரும் தோனி தற்போது எலெக்ட்ரிக் சைக்கிள் நிறுவன விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த விளம்பரம் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தில் காட்சிகளைக் கொண்டு அதே போல் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த படத்தில் வரும் ரன்பீர் கபூர் போல் தனது கெட்டப் மற்றும் ஹேர் ஸ்டைலில் தோன்றுகிறார். இந்த விளம்பரத்தில் அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் நடித்துள்ளார்.
இந்த விளம்பரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தோனியின் லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது.