/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/270_9.jpg)
மடோன் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படம் வருகிற ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடித்த 'அயலான்' படம் நீண்ட காலமாக உருவாகி வரும் நிலையில் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 'சீதா ராமம்' படம் மூலம் பிரபலமடைந்த மிருணாள் தாக்கூரைநடிக்க வைக்க முயற்சித்து வருவதாகவும் இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்பேச்சுவார்த்தை சுமுகமாக அமையும் பட்சத்தில் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாவார். இப்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)