Advertisment

சூர்யாவுக்கு ஜோடி; கோலிவுட்டில் என்ட்ரி - வேகம் காட்டும் 'சீதா ராமம்' மிருணால் தாக்கூர்

Mrunal Thakur makes his kollywood entry in suriya 42

Advertisment

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ’சூர்யா 42’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை உள்ளிட்ட நகரங்களில்நடந்தது. அடுத்தகட்டபடப்பிடிப்பு இலங்கையில் நடத்ததிட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தில்'சீதா ராமம்' படம் மூலம் கவனம் ஈர்த்த மிருணால் தாக்கூர்நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. கதைப்படி பீரியட் போர்ஷன் சம்பந்தப்பட்டகாட்சிகள் இருப்பதால், அதில் சூர்யாவுக்கு ஜோடியாகமிருணால் தாக்கூர்நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிருணால் தாக்கூர், மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து 'சீதா ராமம்' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்த நிலையில்இவரதுநடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு பாராட்டையும் பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது தமிழில் 'சூர்யா 42' படம் மூலம்என்ட்ரிகொடுக்கவுள்ளதாகத்தெரிகிறது.

Mrunal Thakur siruthai siva Suriya 42 actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe