இந்தி மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் மிருணாள் தாக்கூர், கடைசியாக அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த 1ஆம் தேதி வெளியான ‘சன் ஆஃப் சர்தார் 2’ படத்தில் நடித்திருந்தார். இப்போது தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் ‘டகோயிட்’, இந்தியில் இரண்டு படங்கள் உள்ளிட்டவை கைவசம் வைத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் மிருணாள் தாக்கூர், இந்தி நடிகை பிபாஷா பாசு குறித்து பேசிய பழைய வீடியோ கடந்த சில தினங்களாக இணையத்தில் உலா வந்தது. அந்த வீடியோவில், “பிபாஷா பாசுவை விட நாம் நன்றாக இருக்கிறேன். ஆண்களைப் போல தசைகளைக் கொண்டவரைத் திருமணம் செய்ய வேண்டுமா? பிபாஷா பாசுவை கல்யாணம் செய்து கொள்ளுங்கள்” என்று மிருணாள் தாக்கூர் பேசுகிறார். இது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. மிருணாள் தாக்கூர், உருவ கேலி செய்வதாக விமர்சனங்கள் எழுந்தது. பிபாஷா பாசு, தமிழில் விஜய் நடித்த சச்சின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து பிபாஷா பாசு, “வலிமையான பெண்கள், தானும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்த்திவிடுவார்கள். அதனால் அழகான பெண்களே உங்கள் தசைகளை வலிமைப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் வலுவாக இருக்க வேண்டும். தசைகள் வலுவாக இருந்தால், அது நல்ல உடல்நலத்துக்கும் மன ஆரோக்கியத்துக்கும் உதவும். பெண்கள் உடல் ரீதியாக வலிமையாக இருக்கக்கூடாது என்ற பழங்காலத்துச் சிந்தனையை மாற்றுங்கள்” எனத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலளித்திருந்தார். 

62
பிபாஷா பாசு
Advertisment

இதனைத் தொடர்ந்து, மிருணாள் தாக்கூர், பிபாஷா பாசு பெயரைக் குறிப்பிடாமல், வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “19 வயதில், நான் டீனேஜராக இருந்தபோது நிறைய முட்டாள்தனமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். நான் நகைச்சுவையாகப் பேசிய வார்த்தைகள் கூட இந்தளவு காயப்படுத்தும் எனத் தெரியவில்லை. ஆனால் அது நடந்துவிட்டது. அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

யாரையும் உடல் ரீதியாக அவமானப்படுத்துவது என் நோக்கமல்ல. அது ஒரு நேர்காணலில் விளையாட்டுத்தனமாகச் சொன்னது. அது மிகைப்படுத்தப்பட்டு விட்டது. நான் வேறுவிதமான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் காலப்போக்கில், அழகு எல்லா வடிவங்களிலும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். இப்போது அதை நான் பெரிதும் மதிக்கிறேன்” என்றுள்ளார்.