Advertisment

யூடியூபர் டூ கதாநாயகன்; ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அட்லி

Mr.house keeping first look poster released

Advertisment

கடந்த 2017ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் ‘மெர்சல். இப்படத்தில் காஜல், சமந்தா, வடிவேல், கோவை சரளா உள்ளிடோர் நடித்திருந்தனர். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. மெர்சல் படம் நல்ல வசூலை தயாரிப்பு நிறுவனத்திற்கு பெற்று தந்தது.

அதன் பிறகு, எந்தப் படத்தையும் தயாரிக்காமல் இருந்த ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ், கடந்த ஆண்டு பாபி சிம்ஹாவை வைத்து ‘வல்லவனுக்குவல்லவன்’ என்ற படத்தை தயாரித்திருந்தது. ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைத்தரவில்லை. இந்த நிலையில், ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தப் படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் அட்லி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ‘மிஸ்டர். ஹவுஸ் கீப்பிங்’ (MR.House Keeping) எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல யூடியூபரான ஜம்கட் புகழ் ஹரி பாஸ்கர் நடிக்கிறார். இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார்.

Advertisment

Thenandal films
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe