mp minister narottam mishra warning to madhuban song

Advertisment

பாலிவுட் சினிமாவில்முன்னணி நடிகையாக இருக்கும் சன்னி லியோன் சமீபத்தில் 'மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே' என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். சரிகம நிறுவனம் வெளியிட்ட இப்பாடல்ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும் சன்னி லியோன் நடனமாடிய இப்பாடல் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாககூறி பலரும்கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில் மத்தியப்பிரதேசமாநிலத்தின் உள்துறை அமைச்சர்நரோத்தம் மிஸ்ராஇப்பாடலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மூன்று நாட்களுக்குள் இப்பாடலை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்கவில்லை என்றால்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் சரிகம நிறுவனம் மூன்று நாட்களில் இப்பாடலின் வரிகளும், பெயரும் மாற்றப்படும் என உறுதியளித்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி யூடியூப் தளத்தில் வெளியான இப்பாடல்11 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.