Advertisment

இளையராஜா குடும்பத்தினருக்கு எம்.பி கனிமொழி ஆறுதல்

MP Kanimozhi condoles the Ilayaraja family for bhavadharani passed away

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சிகிச்சை பலனின்றி கடந்த மாத 25 ஆம் தேதி மாலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisment

பின்பு விமானம் மூலம் இலங்கையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பவதாரிணியின் உடல், இளையராஜாவின் சொந்த ஊரான தேனியில் அவரின் தாயார் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவா ஆகியோரின் மணிமண்டபத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே இளையராஜா குடும்பத்தாருக்கு நேரில் சென்றும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் கடந்த மாதம் 30ஆம் தேதி நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சென்னையில் இளையராஜா வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் இளையாராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இருந்தனர். இருவரையும் சந்தித்து எம்.பி கனிமொழி.ஆறுதல் கூறினார்

kanimozhi yuvan shankar raja Ilaiyaraaja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe