mp hema malini said Kangana Ranaut possibly contesting elections from Mathura

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி கொள்வார். பாலிவுட் திரையுலகம் ஒரு முனையில் இருந்தால் கங்கனா ரணாவத்அதற்கு எதிராக மறுமுனையில் இருப்பார். பாலிவுட்டில் திரையுலகினரின் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துக்களைகூறிவரும் கங்கனா, மோடி பிரதமராக பதவி ஏற்றத்தில் இருந்து தன்னை ஒரு வலதுசாரி ஆதரவாளராககாட்டிக்கொண்டு, தொடர்ந்து மத்திய அரசுக்கும், மோடிக்கும்ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நடிகை கங்கனா அடுத்த தேர்தலில் நடிகை ஹேமா மாலினி எம்.பி யாக இருக்கும் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்துநடிகையும், மதுரா தொகுதியின் எம்.பியுமான ஹேமா மாலினி அளித்த பேட்டியில், "இந்த தொகுதியில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமேவெற்றி பெற முடியும். வேறு யாராவது போட்டியிட்டால் வெற்றிபெறமாட்டார்கள். யாருக்கு தெரியும் நடிகை ராக்கி ரேவந்து கூட இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறலாம், எல்லாம் கடவுளை பொறுத்துஅமையும்" என தெரிவித்துள்ளார்.

Advertisment