This movie is total disgrace to India Armed Forces Indian Army and Sikhs - Monty Panesar

அமீர் கான் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லால் சிங் சத்தா'. இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நேற்று (11.08.2022) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அதே சமயம் சில எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசர் 'லால் சிங் சத்தா' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இந்த படம் இந்திய ஆயுதப்படை, இந்திய ராணுவம் மற்றும் சீக்கியர்களுக்கு முழு அவமானமும் இழிவாகவும் உள்ளது. இப்படத்தில் அமீர் கான் ஒரு முட்டாள் வேடத்தில் நடித்துள்ளார். ஃபாரஸ்ட் கம்பும் ஒரு முட்டாள் படம்." என குறிப்பிட்டு இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Advertisment

இதே போல் சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் இப்படத்தில் இந்து சாமிகளை கிண்டல் செய்வது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு இந்து அமைப்பினர் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.