Advertisment

மெட்ரோ பணியால் விபரீதம்... நூலிழையில் தப்பித்த நாகினி சீரியல் நடிகை...

நாகினி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் இந்தியா முழுவதும் தனக்கென ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் மௌனி ராய். இந்த தொடர் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். கோல்ட் என்கிற படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

Advertisment

mouni roy

இவர் மும்பையில் படப்பிடிபில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது ஜுஹு என்ற இடத்திலுள்ள சிக்னலில் கார் நின்றுள்ளது. அருகில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்துகொண்டிருந்துள்ளது. கார் நிற்பதற்கு அருகிலேயே மெட்ரோ பணிகள் உயரத்தில் நடந்துகொண்டிருந்துள்ளது. அப்போது மேலே இருந்து பெரிய பாறை ஒன்று மௌனி ராய் காரின் மேல் விழுந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாறை விழுந்ததின் மூலம் காரின் மேல் உள்ள கண்ணாடி உடைந்து சுக்கு சுக்காக தெறித்துவிட்டது. அதிர்ஷ்ட்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர்தப்பினார் மௌனி ராய்.

Advertisment

alt="super duper" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="7c7be17c-7f12-485e-811d-d3ff700778d5" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/super%20duper_20.png" />

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “என் காரின் மீது பாறை ஒன்று விழுந்து கார் சேதமைடைந்தது. சாலையை கடப்பவர்கள் யார் மீதாவது விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும் சற்று சிந்தித்து பாருங்கள். மும்பை மெட்ரோவின் இத்தகைய பொறுப்பற்ற செயலுக்கு உங்களிடம் ஏதாவது ஆலோசனை உள்ளதா? என்று குறிப்பிட்டுள்ளார்.

Bollywood mouniroy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe