motta rajendran

Advertisment

இடியட்ஸ் கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பாக போஸ் தயாரிக்கும் படம் 'அலிபாபாவும் 40 குழந்தைகளும்'.புதுமுகம் போஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தின் கதாநாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் அப்புகுட்டி, மொட்ட ராஜேந்திரன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் நடிக்க உள்ளனர். மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிச்சந்தர் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் பேசும்போது...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

"நான் இயக்கிய மூன்று படங்களுமே வெவ்வேறு கதையம்சம் கொண்டவை. இந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க உள்ளோம். 'உழைப்பே உயர்வு, உழைக்காமல் எவராலும் முன்னேற முடியாது' என்ற உலகம் அறிந்த உண்மை தத்துவமே இந்த படத்தின் திரைக்கதை. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க உள்ளோம். முதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கிறார்கள் இவர்களுடன் பஸ் ஒன்று முக்கிய கதாப்பாத்திரமாக வர இருக்கிறது. படப்பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடைபெற உள்ளது" என்றார்.