தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘மதர்’. இப்படத்தின் நாயகியாக அர்திகா நடித்துள்ளார். தேவராஜன் இசையமைத்துள்ள இப்படம் இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி உறவுச்சிக்கலை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு எழுத்தாளர் ரூபன் கதை வசனம் எழுதியுள்ளார். பிரபல இயக்குநர் வின்செண்ட் செல்வா, இப்படத்தின் திரைக்கதை எழுதியிருப்பதுடன் தயாரிப்பு மேற்பார்வை பணிகளையும் செய்துள்ளார். படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் கொடைக்கானலில் நடந்தது.
அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.