
கடந்த வருடம் ஆக்கின் பீனிக்ஸ் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ஜோக்கர்'. ஹேங் ஓவர் படங்களை இயக்கிய டோட் பிலிப்ஸ்தான் இப்படத்தை இயக்கியிருந்தார்.
ஏற்கனவே ஜோக்கர் கதாபாத்திரத்தில் ஹீத் லெஜ்ஜர் நடித்து ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தைச் சம்பாதித்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரும் நடித்தாலும் ரசிகர்களால் ஏற்றுகொள்ளவும் முடியாது என்பதுபோல நடித்திருந்தார் ஹீத். இதுபோன்ற சவால்களைத் தனது நடிப்பால் முறியடித்து, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் ஆக்கின் பீனிக்ஸ். இப்படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது
உலகம் முழுவதும் அடல்ட் மட்டுமே பார்க்கும் ஆர் ரேட்டட் படமான ஜோக்கர் 90 மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 1 பில்லியன் டாலர்களை வசூல் செய்தது. இதுவரை வெளியான ஆர் ரேட்டட் படங்களில் அதிக தொகை வசூலித்த படம் இதுவே.
இந்நிலையில் இப்படம் இங்கிலாந்தில் 2019 ஆண்டின் அதிக புகார்களைப் பெற்ற திரைப்படம் என்று பிரிட்டிஷ் திரைப்பட வகைப்படுத்தல் வாரியம் (பி.பி.எஃப்.சி.) தெரிவித்துள்ளது. இதுவரை இப்படத்துக்கு எதிராக 15 புகார்கள் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான புகார்கள் இப்படத்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்றும், இப்படம் தடை செய்யப்படவேண்டும் என்று இருந்ததாகவும் பி.பி.எஃப்.சி. கூறியுள்ளது.
ஆனால் இப்படத்தின் புகார்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டான 2018ஆம் ஆண்டு வெளியான ‘ரெட் ஸ்பாரோ’ திரைப்படத்தைக் காட்டிலும் குறைவு. அப்படத்துக்கு எதிராக வந்த புகார்களின் எண்ணிக்கை மொத்தம் 64. அதே போல 2008ஆம் ஆண்டு நோலனின் இயக்கத்தில் வெளியான ‘தி டார்க் நைட்’ படத்துக்கு எதிரான புகார்களின் எண்ணிக்கை 364 என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)