அடுத்த வீடியோ பாடலை வெளியிட்ட லெஜண்ட் படக்குழு

Mosalo Mosalu Video Song  out now

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தை ஜே.டி - ஜெரி ஆகியோர் இயக்குகின்றனர். இப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி படக்குழு படத்தின் பாடல்களைவெளியிட்டு வருகிறது. அந்த வகையில்ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற மோசலோமோசலுபாடலின்வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின்கவனத்தை ஈர்த்து வருகிறது.

arul saravanan the legend
இதையும் படியுங்கள்
Subscribe