Advertisment

நடிகைகளுக்கு அடுத்தடுத்து பாலியல் தொல்லை... சிக்கிய பிரபலம் !

morgan freeman

ஹாலிவுட்டில் சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கி 80 நடிகைகளுக்கு மேல் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பிரச்னை சற்று ஓய்ந்த நிலையில் தற்போது புதியதாக பிரபல ஹாலிவுட் நடிகர் மார்கன் ப்ரீமேன் மீது 16 பெண்களுக்கு மேல் பாலியல் புகார் கூறி ஹாலிவுட்டை அதிர்ச்சி அடைய செய்துள்ளனர். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேல் தன் நடிப்பால் ஹாலிவுட்டில் கோலோச்சிவரும் மார்கன் ப்ரீமேன் கடந்த ஆண்டு வெளியான 'கோயிங் இன் ஸ்டைல்' படத்தில் தயாரிப்பு உதவியாளராக தான் பணியாற்றியபோது மார்கன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் புகார் கூறி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Advertisment

மேலும் படத்தில் வேலை செய்த இன்னொரு பெண் கூறும்போது... 'படப்பிடிப்பு தளத்தில் என் உடம்பில் தொடக்கூடாத இடங்களில் தொட்டும் ஆபாச வார்த்தைகள் பேசியும் மார்கன் எனக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுத்தார்' என்று குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் தற்போது 'நவ் யூ சீ மீ' படக்குழுவை சேர்ந்த இன்னொரு பெண்ணும்.... 'மார்கன் ப்ரீமேன் முன்னால் இறுக்கமான உடைகள் அணிந்து பெண்கள் சென்றால் பின் பக்கத்தில் தட்டி சில்மிஷம் செய்வார். இதனால் அவர் பக்கத்தில் செல்லவே பெண்கள் பயப்படுவார்கள்' என்று பகிரங்க புகார் கூறியுள்ளார்.இதுபோல் இன்னும் 16 பெண்களுக்கு மேல் பாலியல் புகார் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து வாய் திறந்த மார்கன் ப்ரீமேன் தற்போது அந்த பெண்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில்... "நான் யாரையும் தொந்தரவு செய்வது இல்லை. என்னால் அசவுகரியத்துக்கு உள்ளான பெண்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்" என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Advertisment
morganfreeman srileaks srireddy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe