'எல்.கே.ஜி' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முற்றிலுமாக முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகிவந்த நிலையில், வரும் தீபாவளி அன்று 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின், ட்ரைலர்சமீபத்தில் வெளியானநிலையில், 'மூக்குத்தி அம்மன்' படத்திற்குதடைகோரிசென்னைமாநகரகாவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்கள் நல கட்சியினர்அளித்துள்ளபுகாரில், சிறுபான்மை மக்களைகொச்சைபடுத்தும் வகையில்காட்சிகள் இருப்பதால், படத்தைதடை செய்யவேண்டும்எனகோரியுள்ளனர். இதனால் 'மூக்குத்தி அம்மன்' படம் திட்டமிட்டபடிதீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.