Advertisment

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நட்சத்திர பட்டாளம் 

mookuthi amman 2 star cast

ஆர்.ஜே பாலாஜி - என்.ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

Advertisment

இரண்டாம் பாகத்தில் மீண்டும் நயன்தாராவே அம்மனாக நடிக்கிறார். ஆனால் இப்படத்தைச் சுந்தர்.சி இயக்குகிறார். வேல்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இந்த முறை பிரம்மாண்டமாக பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் பிரம்மாண்டமாக நடந்தது. இதற்காக ரஜினி மற்றும் கமலிடம் சமீபத்தில் ஐசரி கணேஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Advertisment

பூஜை நிகழ்ச்சியில் இப்படத்தின் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை சுந்தர் சி அறிமுகப்படுத்தினார். இப்படத்தில்ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் ஆகியோர் நடிப்பதாகத் தெரிவித்தார். மேலும் ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயன்தாரா, மீனா, குஷ்பு, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

Mookuthi amman 2 Nayanthara Regina Cassendra sundar c
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe