Advertisment

அனுஷ்கா பெயரில் பண மோசடி - பட ஆசையால் தயாரிப்பாளருக்கு நடந்த சம்பவம்

Money laundering in the name of Anushka

தமிழில் நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாக'பாகமதி' படம் வெளியானது. கடந்த 2018 ஆம் ஆண்டுஇப்படம் வெளியான நிலையில், அதன் பிறகு பெரியளவில் எந்தப் படத்திலும் அனுஷ்கா நடிக்கவில்லை. இப்போது தனது 48வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு சமையல் கலைஞர்கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், அனுஷ்கா பெயரில் பண மோசடி நடந்துள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது. மேலாளர்எல்லா ரெட்டி என்பவர் அனுஷ்காவை சந்திக்க வைத்து அவரிடம் கால்ஷீட்டை பெற்றுத்தருவதாகக் கூறிஅனுஷ்காவைவைத்துப்படமெடுக்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர் லட்சுமண் சாரியிடம்ரூ.51 லட்சம்பணத்தைப் பெற்றுள்ளார். இது மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் மணி சர்மாவின் கால்ஷீட்டையும் வாங்கித்தருவதாகக் கூறிரூ.25 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார்.

Advertisment

ஆனால் பல முறைதயாரிப்பாளர் லட்சுமண் சாரியை பெங்களூருக்கு அழைத்துச் சென்றஎல்லா ரெட்டி, கடைசி வரை இருவரையும் சந்திக்க வைக்கவில்லை. இதனால் தான்ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததயாரிப்பாளர் லட்சுமண் சாரி,எல்லா ரெட்டியிடம் பணத்தைத்திரும்பக் கேட்டுள்ளார்.எல்லா ரெட்டி பணத்தைக் கொடுக்காததால் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில்தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திடம் லட்சுமண் சாரி புகார் அளித்திருந்த நிலையில் எல்லா ரெட்டியை கண்டித்துள்ளார்கள். ஆனால், பணம் திரும்ப வராததால்காவல் நிலையத்திற்குத்தயாரிப்பாளர்சென்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

anushka shetty
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe