ஆவாரம்பூ என்னும் படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் வினித். இதனை தொடர்ந்து புதிய முகம், காதலர் தினம், மே மாதம், சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அண்மையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வெளியான படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வினித் நடித்திருந்தார். மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவரது பெயரை பயன்படுத்து ஆன்லைனில் பண மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் வினித் பெயரை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் போலி கணக்கு ஒன்றை உருவாக்கி வேலைவாய்ப்பு மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டு பணம் பறித்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்து வினித் அதிர்ச்சியானார். இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பிக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில், “எங்கள் குடும்ப படத்தையும் எனது சமூக வலைதள கணக்கை போலியாக பயன்படுத்தியும் மோசடி நடக்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
வினித் அளித்துள்ள பேட்டியில், ‘எனது நண்பரிடம் மோசடி கும்பல் தொடர்பு கொண்டு பேசி உள்ளது. அவர்தான் இந்த மோசடியை என்னிடம் தெரிவித்தார். மக்கள் இதுபோன்ற மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)