Skip to main content

படேலுக்கு சிலை வைத்தால் போதுமா? நாட்டை பிளவுபடுத்துவது நியாயமா? மஹுவா மொய்த்ரா ஆவேசம்!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிய பாஜக அரசு, அடுத்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தையும் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தது.
 

moitra

 

 

இந்த மசோதாவை எதிர்த்து மேற்குவங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் ஆவேசமாக பேசினார். அப்போது அவர்,
 

“உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான படேல் அமர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார். மோடி அரசு படேலுக்கு உயரமான சிலை வைத்தால் மட்டும் போதாது. அவர் ஒன்றுபடுத்திய இந்தியாவை பிளவுபடுத்தாமல் இருக்க வேண்டும். இப்போது கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தத்தின்கீழ் அரசுக்கு பிடிக்காத ஒரு நபரை பயங்கரவாதி என்று கைது செய்து சிறையில் அடைக்க முடியும். அதாவது அரசை ஆதரிப்போர் கடவுளர்களாகவும், எதிர்ப்போர் சாத்தான்களாகவும் கற்பிக்க முடியும். அதாவது, எதிர்க்கட்சி தலைவர்கள், மனித உரிமை ஆதரவாளர்கள், சிறுபான்மையோர், பாஜக அரசு முயற்சிக்கும் ஒரே இந்தியா ஒரே மொழி போன்ற கோட்பாடுகளை எதிரப்போரை தேச விரோதிகளாக முத்திரை குத்த முடியும்” என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக வேட்பாளரை எட்டி உதைத்து புதருக்குள் தள்ளிய தி.காங்கிரஸ் தொண்டர்...(வீடியோ)

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

மேற்குவங்க மாநிலத்திலுள்ள கரீம்பூர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதிக்கு பாஜக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் மஜும்தா திடீரென வந்தார். அப்போது, அவரது காரை திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். உடனடியாக பாஜக வேட்பாளர் காரைவிட்டு வெளியே வந்தவுடன் தி.காங்கிரஸ் தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு, ஜெயப்பிரகாஷை தாக்கினர்.

west bengal

 

 

அதில் ஒரு தொண்டர், ஜெயப்பிரகாஷை எட்டி மிதித்ததில் அவர் புதருக்குள் விழுந்துவிட்டார்.பாதுகாப்பு அதிகாரிகள் வந்து ஜெயப்பிரகாஷை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். தாக்கிய திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை பாதுகாப்பு அதிகாரிகள் துறத்தினர். ஆனால், பிடிக்கமுடியவில்லை. ஜெயப்பிரகாஷ் வேண்டுமென்றே தேர்தல் நடக்கும் இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார் என திரிணாமூல் குற்றம் சுமத்துகிறது. 
 


இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாஜக வேட்பாளார் ஜெயப்பிரகாஷ், “நான் திரிணாமூல் குண்டர்களால் தாக்கப்பட்டேன். தேர்தலின் போது முறைகேடுகளில் திரிணாமூல் தொண்டர்கள் ஈடுபட்டதால் அதைத் தடுக்கவே நான் சென்றேன். அவர்கள் தோற்றுவிடுவோம் என பயந்து ஆளும் திரிணாமூல் தொண்டர்கள் என்னைத் தாக்கினர். இதுகுறித்து நான் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துவிட்டேன்” என்றார்.

திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை மேற்கு வங்க பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

 

 

Next Story

ஐசியூ-விலிருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினருமான  நஸ்ரத் ஜஹான் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை உட்கொண்டதால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
 

nusrat jahan

 

 

தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நஸ்ரத் நேற்று மாலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதுபற்றி நுஷ்ரத்தின் குடும்பத்தினர் கூறும்போது,  “அவருக்கு ஆஸ்த்துமா பிரச்னை ஏற்கெனவே இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை சுவாசப் பிரச்னை தீவிரமானதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் நலமாக இருக்கிறார். அவர் பற்றி வரும் வதந்திகளை நம்பவேண்டாம். அவர் தூக்க மாத்திரை ஏதும் சாப்பிடவில்லை” என்று தெரிவித்தனர்.

நஸ்ரத்துக்கு சமீபத்தில்தான் அவரின் காதலரும் தொழிலதிபருமான நிகில் ஜெயினுடன் கடந்த ஜூன் மாதம் துருக்கியில் திருமணம் செய்துகொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நஸ்ரத்துக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் உடனடியாக அன்றிரவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.