Skip to main content

புற்றுநோயால் மரணமடைந்த நகைச்சுவை நடிகர்!

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

mohit


'உவா', 'மிலன் டாக்கீஸ்' சல்மான் கானுடன் 'ரெடி', பரினீதி சோப்ராவுடன் 'ஜபாரியா ஜோடி' உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் மோஹித். ராணி முகர்ஜி, சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகும் 'பண்டீ அவுர் பப்ளி 2' படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஜனவரி மாதம் முதல் அந்தப் படத்தில் நடித்து வந்தார்.
 


கடந்த ஆறு மாதங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை மோஹித் மேற்கொண்டிருந்தார். நோயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக அவரது திரையுலக நண்பர், இயக்குனர் ராஜ் சாண்டில்யா (ட்ரீம் கேர்ள் இயக்குனர்) கூறியுள்ளார். அவருடைய உடலில் நோய் தீவிரமடைந்ததால், சனிக்கிழமை, மதுராவில் இருக்கும் அவரது இல்லத்தில் மோஹித் உயிர் பிரிந்தது.

மோஹித்தின் மரணத்துக்கு பல பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலகில் சக்தி வாய்ந்த 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த இந்திய மூதாட்டி...

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

times 100 most influential 2020

 

டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள உலகில் சக்தி வாய்ந்த 100 நபர்களின் பட்டியலில் ஷாஹீன்பாக் போராட்டத்தில் பங்கேற்ற 82 வயதான மூதாட்டி பில்கிஸ், பிரதமர் மோடி உட்பட ஐந்து இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். 

 

உலகப்புகழ் பெற்ற டைம்ஸ் இதழ், ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சக்திவாய்ந்த 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, நடிகர் ஆயுஷ்மான் குரானா, சுந்தர் பிச்சை ஆகிய பிரபலங்கள் இடம்பிடித்துள்ளனர்.

 

இவர்களைத் தவிர, எய்ட்ஸ் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் எய்ட்ஸ் நோயாளி ஒருவரைக் குணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய மருத்துவர் ரவீந்திர குப்தா இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மேலும், இந்தப் பட்டியலில் ஷாஹீன்பாக் போராட்டத்தில் பங்கேற்ற 82 வயதான மூதாட்டி பில்கிஸ் இடம்பிடித்துள்ளார். டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

''எழுந்து நடனமாடுவது போல் உணர்கிறேன்'' - அமிதாப் பச்சன் ட்வீட்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

dsvd


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், ஆயுஷ்மான் குரானாவும் இணைந்து நடித்துள்ள படம் ‘குலாபோ சிதாபோ’. மேலும் இந்தப் படத்தில் பிஜேந்திர காலா, விஜய் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 


சுஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கரோனா பாதிப்பால் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீஸாகிறது. வருகிற ஜூன் 12ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸாகும் இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வரும் நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் இப்படத்தில் வரும் 'மாதரி கா பந்தர்' எனத் தொடங்கும் பாடலை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு, ''நகர்கிறேன், வளர்கிறேன், எழுந்து நடனமாடுவது போல் உணர்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.