Skip to main content

ஓடிடியில் வெளியாகும் சரித்திர படம் !

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

Mohanlal's marakkar lion of the arabian sea movie released released on OTT

 

பிரபல மலையாள இயக்குநர்  பிரியதர்ஷன் இயக்கத்தில், நடிகர் மோகன்லால் 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' என்ற சரித்திர படத்தில் நடித்துள்ளார். இப்படம் 100 கோடி பட்ஜெட் செலவில் உருவாகியுள்ளது.  இதில், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

 

'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' படத்தின் பணிகள் அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முடிவடைந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இப்படம் வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. அதனையடுத்து கடந்த மார்ச் மாதம் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், ஓணம் பண்டிகைக்குப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அப்போதும் படம் வெளியாகவில்லை. 

 

இந்நிலையில், கேரள மாநிலத்தில் கரோனா பரவலால் திரையரங்குகளில் 50 சதவித பார்வையாளர்களுக்கு மட்டும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. பெரிய பட்ஜெட் படத்தை தற்போது திரையரங்கில் வெளியிட்டால் பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

 

சிறந்த திரைப்படம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் இப்படம் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோகன்லாலுடன் இணையும் கமல்ஹாசன்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

kamal hassan to join in mohanlal movie

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

'இந்தியன் 2' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமும், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.  இதனிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கமலிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

 

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் 13 ஆண்டுகள் கழித்து கமலும் மோகன்லாலும் இணைந்து நடிக்கவுள்ளனர். முன்னதாக 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

தடை நீக்கம்; மோகன்லால் படத்திற்கு புதிய நிபந்தனை

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

Ban on Mohanlal's Monster lifted in Bahrain

 

மோகன்லால் நடிப்பில் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மான்ஸ்டர்'. ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இப்படத்தில் லக்‌ஷ்மி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உதய்கிருஷ்ணா எழுத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 21ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

 

இப்படத்தில் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த காட்சிகள் இருப்பதாகக் கூறி வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. இது படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும் என்பதால், தேவையான மாற்றங்களை செய்து படத்தை தணிக்கை குழுவிடம் மீண்டும் சமர்ப்பிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. 

 

இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் இப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழு படத்தை மறுமதிப்பீடு செய்ய தணிக்கை குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தில் உள்ள 13 நிமிட காட்சிகளை ட்ரிம் செய்யுமாறு தயாரிப்பாளர்களிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி படத்திற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் மோகன்லால் நடித்த 'மான்ஸ்டர்' படம் பஹ்ரைன் நாட்டில் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். மேலும் படத்திற்கு தடை விதித்த மற்ற வளைகுடா நாடுகளிலும் மறுமதிப்பீடு செய்யும் முயற்சியை படக்குழு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.