Advertisment

மகன் படத்துக்காக ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த மோகன் லால் 

mohanlal talk about hridayam movie

பிரபல மலையாள எழுத்தாளரும், நடிகருமான ஸ்ரீனிவாசன் மகன்வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மோகன்லாலின்மகன் பிரணவ் 'ஹ்ரிதயம்'படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். மலையாள பிரபலங்களின் வாரிசுகள் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில்வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடுசினிமா விமர்சகர்களிடம் பாராட்டுக்களையும்பெற்று வருகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="11991157-833e-42e6-a933-e2ba2d79aac7" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_33.jpg" />

Advertisment

இந்நிலையில் இப்படத்தை பார்த்து பாராட்டிய மோகன் லால் தனது சமூக வலைதள பக்கத்தில், "பிரியதர்ஷன், ஸ்ரீனிவாசன் மற்றும் என்னுடைய குழந்தைகள் அனைவரும் இப்படத்தில் இதயபூர்வமாக இணைந்துள்ளனர். இப்படம் நம் இதயத்திற்கு நெருக்கமான ஒரு படமாக இருக்கும். இப்படம் உங்கள் அனைவருக்கும் உற்சாகத்தை தரும் என்று நான் உறுதியாக கூறுகிறேன். சினிமாவைச் சேர்ந்த ஒருவனாக நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். சினிமா துறை இக்கட்டான சூழலில் இருக்கும் இந்தத் தருணத்தில் இயன்றவரை கலைஞர்களுக்கு ஆதரவு கொடுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

hridayam mohanlal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe