mohanlal son work in farm

பிரபல மூத்த நடிகர் மோகன்லாலில் மகன் பிரனவ். இவர் 2015ல் மோகன்லால் பட தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதற்கு முன்பாக குழந்தை நட்சத்திரமாக மோகன்லாலின் இரண்டு படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து 2018ல் வெளியான ஆதி என்ற மலையாளப் படத்தில் நடிகராக அறிமுகமாகியிருந்தார். பின்பு கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ஹிருதயம் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். கடைசியாக கடந்த ஏப்ரலில் வெளியான வர்ஷங்களுக்கு சேஷம் படத்தில் நடித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் பிரணவ் சம்பளம் வாங்காமல் ஒரு பண்ணையில் வேலை செய்து வருவதாக அவரது தாய் சுசித்ரா மோகன்லால் யூட்யூப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “பிரணவ் தற்போது ஸ்பெயின் நாட்டில் பண்ணை போன்ற ஒரு இடத்தில் வேலை பார்க்கிறார். அவருக்கு சம்பளம் கிடையாது. அதற்கு பதிலாக தங்கும் இடமும் உணவும் உண்டு. சில நேரங்களில் அவர் குதிரை மற்றும் ஆடுகளை கூட கவனிக்க வேண்டியது இருக்கும். இது ஒரு அனுபவம்.

Advertisment

எனக்கு ஸ்கிரிப்ட்களைக் கேட்பது பிடிக்கும். அதனால் அதை உட்கார்ந்து கேட்பேன். பிரணவ் இப்போது இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கிறார். ஆனால் வருடத்துக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என கூறுவேன். அனைத்தையும் பேலன்ஸ் செய்ய வேண்டும் என அவர் விரும்புகிறார்” என்றார். மேலும் மோகன்லாலும் பிரணவ்வும் ஒரே படத்தின் நடிப்பதை அவர் விரும்புவதில்லை என்றும் அப்படி நடித்தால் அதை ஒப்பீடு செய்யும்போது தனக்கு கவலை அளிக்கும் என கூறினார்.