Advertisment

மம்மூட்டி போல் மோகன்லால் எடுத்த முடிவு

mohanlal ooty villa open for peoples

மோகன்லால் தற்போது மலையாளத்தில் ஹிருதயபூர்வம், விருஷபா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் விஷ்னு மஞ்சு நடித்த ‘கண்ணப்பா’ படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத் தவிர்த்து தமிழில் ரஜினி - நெல்ச கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் 2, அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகுவதாக சொல்லப்படும் படம் மற்றும் சிவகார்த்திகேயன் - குட் நைட் பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் கூட்டணியில் உருவாகுவதாக சொல்லப்படும் படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் மோகன்லால் ஊட்டியில் இருக்கும் தனது வில்லாவை சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்காக வாடகைக்கு விட்டுள்ளார். ஒரு நாளுக்கு 37 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மூன்று படுக்கையறைகளை கொண்ட இந்த வீட்டில் அனைத்து சகல வசதிகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் மோகன்லால் நடித்த முக்கிய கதாபாத்திரங்களின் சித்திரங்கள் இடம்பெற்றிருக்கிறது. மேலும் ‘கன் ஹவுஸ்’ என்று பெயர் சொல்லப்படும் அறை இருக்கிறது. இதில் மோகன்லால் மரக்கர் மற்றும் பரோஸ் ஆகிய படங்களில அவர் பயன்படுத்திய டம்மி துப்பாக்கிகள் பொருட்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. அதோடு மோகன்லால் குடும்பத்தினருக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக சமைத்து கொடுத்து வரும் சமையல்காரரும் இங்கு பணி செய்கிறார். இதனால் மோகன்லால் ரசிகர்கள் இந்த வில்லாவை புக் பண்ண ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisment

இதே போல் கடந்த மார்ச் மாதம் மம்மூட்டி கொச்சியில் உள்ள அவரது பங்களாவை ரசிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்காக மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு படுக்கையறைகள் கொண்ட இந்தப் பங்களாவில் ஒரு நாள் வாடகை ரூ.75 ஆயிரம் நியமிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

ooty mohanlal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe