Advertisment

ஒரே களத்தில் முத்துவேல் பாண்டியன்-மலைக்கோட்டை வாலிபன்

mohanlal meet rajini in rajasthan photos goes viral on internet

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Advertisment

மேலும், மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினி மற்றும் மோகன்லால்சந்தித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் இணைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மோகன்லால், 'ஜெயிலர்' மட்டும் அல்லாது லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் ராஜஸ்தானில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

mohanlal Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe