/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/68_42.jpg)
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் மம்மூட்டி மற்றும் மோகன் லால் இருவரும் இதுவரை 7 படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக ‘Twenty:20’ படத்தில் நடித்திருந்தனர். இப்படம் 2008ஆம் ஆண்டு வெளியானது.
இந்த நிலையில் 16 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். ‘டேக் ஆஃப்’, ’சி யூ சூன்’, ‘மாலிக்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் குஞ்சக்கோ போபன் நடிக்கிறார். மேலும் ஃபகத் ஃபாசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பித்து பின்பு லண்டன், அபுதாபி, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன் லாலும் மம்மூட்டியும் இணைந்து நடிப்பதாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கு இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)