Advertisment

‘தேசத்த கட்டுப்பாட்டுல வச்சிருந்தாங்க...’; கமல் வெளியிட்ட மோகன்லால் - மம்மூட்டி பட அப்டேட்

97

மலையாள முன்னணி நடிகர்களான மம்மூட்டியும் மோகன்லாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் ‘பேட்ரியாட்’. பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. சமீபத்தில் மம்மூட்டி படப்பிடிப்பில் இணைந்தார். முன்னதாக உடல்நிலை காரணமாகக் கடந்த 7 மாதங்களாகப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இப்படத்தில் ஃபகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா மற்றும் ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தை ஆண்டோ ஜோசப், கே ஜி அனில் குமார் தயாரித்து வருகின்றனர். சி ஆர் சலீம், சுபாஷ் ஜார்ஜ் மானுவல் இணை தயாரிப்பு செய்து வருகின்றனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Advertisment

டீசர், ஃபகத் ஃபாசில் வாய்ஸ் ஓவருடன் ஆரம்பிக்கிறது. அவர், ‘அப்பா சொல்லி நான் கேட்டிருக்கேன், ஒரு காலத்துல இந்த தேசத்தை இவங்க கட்டுப்பாட்டுல தான் வச்சிருந்தாங்க. இத்தனை காலமா இவங்க சம்பாதிச்சது ஃபாலோயர்ஸ இல்ல. விஸ்வாசம்’ என சொல்கிறார். பின்பு ஒவ்வொரு கதாபாத்திரமாக ரிவீல் செய்யப்படுகிறது. டாக்டராக மம்மூட்டியும் கர்னலாக மோகன்லாலும் ஒரு சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக போராடும் காட்சிகள் இடம்பெறுகிறது. அந்த நடவடிக்கைக்கு பிறகு வேறு எந்த ஆபரேஷனிலும் இருவரும் ஈடுபடாமல் இருக்க ஆனால் காலத்தின் தேவையால் இருவரும் மீண்டும் ஒரு ஆபரேஷனுக்கு கௌகோர்க்க அது வெற்றிகரமாக முடிந்ததா என்பதை ஒரு சமூக அரசியல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.  

ACTOR KAMAL HASSHAN mammooty mohanlal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe