Advertisment

“வார்த்தைகளால் விவரிக்க முடியாது” - மோகன்லால் நெகிழ்ச்சி

mohanlal gers gift from footbal player messi

‘எம்புரான்’ பட வெற்றியைத் தொடர்ந்து மோகன்லால் தற்போது துடாரம், ஹ்ருதயபூர்வம் உள்ளிட்ட இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே தெலுங்கில் ‘கண்ணப்பா’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் துடாரம் வருகிற 25ஆம் தேதி வெளியாகிறது. கண்ணப்பா 27ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

தொடர்ந்து பிஸியாகவே வலம் வரும் மோகன்லால், தற்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதாவது பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி தனக்கு ஆட்டோகிராஃப் போட்டதை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்திருந்த பதிவில், “வாழ்க்கையில் சில தருணங்களைவார்த்தைகளால் விவரிக்க முடியாது. அது அந்தளவிற்கு ஆழமானவை. அவை என்றென்றும் நம்முடன் இருக்கும். அது போன்ற ஒரு தருணத்தை நான் அனுபவித்தேன்.

Advertisment

நான் அந்த பரிசை மெதுவாக திறந்த போது என் இதயம் நின்றுவிட்டது போல் இருந்தது. ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி. அதுவும் என் பெயரை அவரே கையழுத்திட்ட ஜெர்சி. மெஸ்ஸியை நீண்ட காலமாக போற்றும் ஒருவர், அவரது விளையாட்டுக்காகமட்டுமல்ல அவருடைய பணிவுக்காகவும் கருணைக்காகவும் போற்றியவருக்கு இந்த பரிசு உண்மையிலே ஸ்பெஷலானது. இந்த மறக்க முடியாத பரிசுக்கு நன்றி, கடவுளே” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பரிசுக்கு உதவிய அவரது இரண்டு நண்பர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

messi mohanlal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe