/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/59_26.jpg)
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால், தற்போது லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' மற்றும் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே பல்வேறு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
திரைத்துறையில் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் 'பரோஸ்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளதாகத்தெரிவித்தார். இந்த அறிவிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டில் தெரிவித்து படத்தின் பணிகள் 2021 ஆம் ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் மோகன்லால், பிரித்விராஜ், பிரதாப், பாஸ் வேகா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்திற்குலிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார். 3டியில் வெளியாகவுள்ள இப்படத்தை 'ஆசீர்வாத் சினிமாஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தில் தென் ஆப்பிரிக்காவை சார்ந்த இசையமைப்பாளர் மார்க் கிளியன் இணைந்துள்ளதாக மோகன்லால் தெரிவித்துள்ளார். மார்க் கிளியன், ஹாலிவுட்டில் வெளியான 'பிட்ச் பெர்ஃபெக்ட்' மற்றும் 'டீப் ப்ளூ சீ 3' உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஏற்கனவே மோகன்லாலின் இயக்கத்தில் முதல் படமாக வெளியாகவுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகிய நிலையில், தற்போது ஹாலிவுட் கலைஞர் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)