Mohanlal and Kangana Ranaut to act in One Nation mini series

Advertisment

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் படங்களைத்தயாரித்து வரும் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி அண்மையில் ஆறு இயக்குநர்களை வைத்து 'ஒன் நேஷன்' என்ற சிறிய இணையத்தொடரை உருவாக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். அந்த ஆறு இயக்குநர்களாக பிரியதர்ஷன், சஞ்சய் பூரன் சிங் சவுகான், ஜான் மேத்யூ மதன், மஞ்சு போரா, சந்திரபிரகாஷ் த்ரிவிவேதி மற்றும் விவேக் அக்னிஹோத்ரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் இந்த இணையத்தொடர் ஆறு எபிசோட்கள் கொண்டு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியது.

இந்த நிலையில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் கங்கனா ரணாவத் இந்த தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியதர்ஷன் எடுக்கும் தொடரில், மோகன்லால் நடிப்பதாகவும் விவேக் அக்னிஹோத்ரி இயக்கும் தொடரில் கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டின் மத்தியில் அல்லது இறுதியில் தொடங்க உள்ளதாகவும், இந்தியில் வெளியாகி பின்பு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் எனவும் படக்குழு தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.