Advertisment

சிவகார்த்திகேயன் படத்தில் மோகன்லால்

mohanlal to act in sivakarthikeyan movie under ar murugadoss direction

Advertisment

'மாவீரன்' படத்தைத் தொடர்ந்து, கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ படத்தில் அவர் நடித்துள்ள நிலையில் 2024 பொங்கலைமுன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது.

இதையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திற்காக கை கோர்த்துள்ளார். இப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தில் மலையாள முன்னணிநடிகர் மோகன்லால் நடிக்க வாய்ப்புள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க, பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் வில்லனாகத்துப்பாக்கி படத்தில் மிரட்டிய வித்யுத் ஜாம்வால் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு பான் இந்திய படமாக இப்படம் உருவாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிகின்றன.

mohanlal actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe