Mohan.G who booked the famous actor following Selvaragavan, Natty

'பழைய வண்ணாரப்பேட்டை' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்களின் மூலம் பிரபலமானார். இந்த இரு படங்களும் வெளியான போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பினாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்தாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'பகாசுரன்' படத்தின் புதிய அறிவிப்பை மோகன்.ஜி வெளியிட்டுள்ளார். அதன் படி நடிகர் ராதாரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மோகன்.ஜி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான 'ருத்ர தாண்டவம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment