/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/167_7.jpg)
'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்கி பிரபலமான மோகன்.ஜி. தற்போது 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வந்த நிலையில் தற்போது செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "களம் கண்டு ஆடுவான்" என குறிப்பிட்டுள்ளார். இந்த செகண்ட் லுக் போஸ்டரில் செல்வராகவனோடு இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நட்டியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் டீசர் நாளை (28.08.2022) காலை 10.10 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
களம் கண்டு ஆடுவான் #பகாசூரன்#Bakasuran.. படத்தின் டீசர் நாளை காலை 10:10 மணிக்கு வெளியாகும் ??
Stay tuned!@selvaraghavan@natty_nataraj@mohandreamer@SamCSmusic@Gmfilmcorporat1@ProBhuvan@Mrtmusicoffpic.twitter.com/ujSDk170yQ
— Mohan G Kshatriyan (@mohandreamer) August 27, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)