/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/181_17.jpg)
பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சொப்பன சுந்தரி'. எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மோகன் ராஜா சிறப்பு விருந்தினராக படக்குழுவினருடன் கலந்துகொண்டு ட்ரைலரை வெளியிட்டார்.
அப்போது இயக்குநர் மோகன் ராஜா பேசுகையில், ''என்னுடைய உதவியாளராக பணியாற்றிய இப்படத்தின் இயக்குநர் சார்லஸ் பிரபு கடும் உழைப்பாளி. வேலைக்காரன்படத்தின் வெற்றியில்அவரின் பங்களிப்பு அதிகம். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இயக்குநராக உயர்ந்திருப்பது எனக்கு பெருமை. இந்த திரைப்படம் தளபதிதிரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் வசனத்தை போல்...இந்த திரைப்படம் லாக்கப்பை விட நன்றாக வந்திருக்கிறது என சார்லஸ் என்னிடம் தெரிவித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகளையும்முன்னோட்டத்தையும் பார்த்தேன். இது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. சொப்பன சுந்தரிஎன்றதும் அனைவருக்கும் கரகாட்டக்காரன்பட காமெடி காட்சிகள் நினைவுக்கு வரும். இந்த சொப்பன சுந்தரியை பட வெளியீட்டிற்குப் பிறகு ரசிகர்களின் மனதில் வைத்துக் கொள்வார்கள்.
அண்மைக் காலமாக 'தரமற்ற படத்தை பார்வையிட்டாலே தவறு' என்று ரசிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும்ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்வையிட்டுநீங்கள் தான் நல்ல படமாஇல்லையாஎன்பதை தீர்மானிக்க வேண்டும். அதனால் அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். விமர்சகர்கள் மற்றும் விமர்சனங்களால் நடுத்தரமான படைப்புகள் என்ற ஒரு சினிமா இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஒன்று சூப்பர் ஹிட் அல்லது அட்டர் பிளாப் என்ற இரட்டைநிலை மட்டுமே தற்போது இருக்கிறது. ஆவரேஜ் ஃபிலிம் என்ற ஒரு நிலை உருவாக வேண்டும். தனி ஒருவன் 2 இந்த வருடம் இல்லை. அடுத்த வருடம் கண்டிப்பாக இருக்கும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)