grsgs

மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'லூசிஃபர்' படம் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி வெற்றிபெற்றது. நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடித்து வெளியான இப்படம், பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் தற்போது தெலுங்கில் எடுக்கப்படும் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisment

நடிகர் ராம்சரண், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கவுள்ளார். மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படம் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

Advertisment

வரும் மார்ச் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ளது. இதற்கிடையே படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கான தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் மோகன் ராஜா இப்படத்தை முடித்த கையோடு ஜெயம் ரவியை வைத்து ‘தனி ஒருவன் 2’ படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.