எதிர்பார்ப்புகளை அடைந்துவிடலாமா?- தனிஒருவன் 2 குறித்து மோகன் ராஜா

கடந்த 2015ஆம் ஆண்டில் வெளியான தனி ஒருவன் தமிழ் திரையுலக ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற படம். ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடித்த இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. அரவிந்த் சாமி நடித்த சித்தார்த் அபிமன்யூ கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

mohan raja

இதனையடுத்து தனி ஒருவன் படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஜெயம் ரவியின் 25வது படமாக இது இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இன்னும் இப்படத்திற்கான முதற்கட்ட வேலை முடிவடையாததால் ஜெயம் ரவியின் 25-வது படத்தை லட்சுமணனும், 26-வது படத்தை அஹமதுவும் இயக்குகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் மோகன் ராஜா ‘தனி ஒருவன் 2’ குறித்து ட்வீட் செய்து, ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளார்.

alt="natpuna ennanu theriyuma" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6eb5b0a7-e8be-48cc-9261-f87618a5c978" height="127" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x-105%20natpuna%20ennaanu%20theriyuma_5.png" width="371" />

“ ‘தனி ஒருவன்’ அடுத்த பாகத்துக்கான கதை உருவாக்கத்தின் மிகச்சிறந்த தருணம்.

நான் என்னுடைய உதவியாளர்களிடம்: எதிர்பார்ப்புகளை அடைந்துவிடலாமா?

உதவியாளர்கள்: 200% சார்

alt="mr.local" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="fa5b03d5-d7b2-4806-80b8-84f287b0e0e5" height="144" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/mr%20local%20ad.png" width="413" />

போன் அடிக்கிறது. இயக்குநர் ராம்: ராஜா, மறுபடி ‘தனி ஒருவன்’ பார்த்துக்கிட்டு இருக்கேன். மிகப்பெரிய உழைப்பு. எப்படி இப்படி? அடுத்த பாகத்தை ஜாக்கிரதையா பண்ணுங்க.

ஆர்வம் எப்போதும் ஜெயிக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

jayam ravi mohan raja thani oruvan 2
இதையும் படியுங்கள்
Subscribe