/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1638.jpg)
சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த், ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தை பாராட்டியிருந்தனர். மேலும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் விருதுகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் மோகன், மாமனிதன் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில், "பாலுமகேந்திரா சார் உருவாக்கிய சினிமா குடும்பம் ரொம்ப பெருசு. அந்த குடும்பத்தில் நான்தான் மூத்த பிள்ளை என்பதில் எனக்கு ரொம்ப பெருமை. குடும்பத்தில் ஒருத்தரான தம்பி சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் படத்தை பார்த்தேன். நல்ல படம், நம்பிக்கை துரோகம், அதிலிருந்து குடும்பத்தில் வரும் பிரச்சனைகள், நட்பு என எல்லாரையும் தத்ரூபமாக எடுத்துள்ளார். சந்தோஷம், தம்பி சீனு ராமசாமி மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்" என்று பேசியுள்ளார்.
Listen to what the evergreen actor #Mohan sir says about our #Maamanithan ✨@ilaiyaraaja@thisisysr@seenuramasamy@VijaySethuOffl@SGayathrie@studio9_suresh@shajichen@sreekar_prasad@mynnasukumar@gurusoms@onlynikil@CtcMediaboy@chidatrends@ahatamil#MaamanithanOnAHApic.twitter.com/htmG02OOge
— U1 Records (@U1Records) August 20, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)