da

'லாலேட்டன்' என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நேற்று தனது 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்குத் திரைத்துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனும் ''அன்பிற்குரிய மோகன்லால்... உங்களை உங்கள் முதல் படத்திலிருந்தே எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு திருப்பத்திலும் நம்மைத் தரம் தாழ்த்துபவர்கள் மறைந்திருக்கும் இந்தப் பயணத்தில், உங்களது தொடர்ச்சியான தரமான பணியைப் பார்த்து நான் பொறாமை கொள்கிறேன். நாம் இணைந்து பணிபுரிந்தபோது, இன்னும் கூடுதலாக உங்களைப் பிடித்தது. எனது இளைய சகோதரர் போன்று நீங்கள் நெடுங்காலம் வாழ வேண்டும்'' என ட்விட்டரில் வாழ்த்துத்தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில் கமலின் வாழ்த்துக்கு நன்றி கூறி ட்விட்டரில் மோகன் லால் பதிவிட்டுள்ளார். அதில்.... "அன்பார்ந்த கமல் அவர்களே, உங்கள் கனிவான வார்த்தைக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். உங்களைப் போன்ற ஒரு அற்புதமான நடிகர், நிகரற்ற அர்ப்பணிப்பு மற்றும் திறமை கொண்டவரிடமிருந்து இந்த வார்த்தைகள் வருவது நிறைவைத் தருகிறது. இது எனது பயணத்தில் முன்னே செல்ல இன்னும் என்னை ஊக்கப்படுத்தும். நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" எனக் கூறியுள்ளார். மேலும் தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன மற்ற திரை நட்சத்திரங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்து வருகிறார்.

Advertisment